Pages

Tuesday, August 28, 2012

அன்றாட வாழ்வில் அன்னையை கொண்டு வருவது எப்படி? - Message of the Day, August 28, 2012


  

அன்றாட வாழ்வில் அன்னையை கொண்டுவரும் முறைகள்

(Sri Mother's Consciousness in daily life) 

1) First waking thought, விழித்தவுடன் வரும் நினைவு, before sleeping நாள் முடிவில் அன்னையை நினைத்துத் தூங்கப் போவது. இப்படிச் செய்வதால் இரவு முழுவதும் ஏதோ ஓரளவில் நம்முடன் அன்னை நினைவு இருக்கும்.

2)காலையில் வேலைக்குப் போகுமுன் - அரை மணி நேரம் அல்லது 10 நிமிஷம் - அன்றைய எல்லா வேலைகளையும் அன்னையிடம் உணர்வுபூர்வமாகச் சொல்லுதல்.

3)எல்லோருக்கும் மிக முக்கியமான வேலை என இருக்கும். மாணவனுக்குப் பரீட்சை, பெண்ணுக்குத் திருமணம், வியாபாரிக்கு ஆர்டர் என எவருக்கும் மனதில் நிரந்தரமான விஷயம் என்றிருக்கும்.அதை 2 அல்லது 3 முறை மனதில் ½ நிமிஷம் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வது. இதன் பெரும் பலன் வேண்டுமானால் நேரம் குறிக்கப்பட்டு நிமிஷம் தவறாமல் உதாரணமாக காலை7½ மணி, இரவு 8.15, மத்தியானம் 1.15 எனக் குறிப்பிட்டு அந்த நிமிஷத்தில் செய்வது அவசியம். அது முடியாதவர் 2 அல்லது 3 முறை 1 நாளில் சமர்ப்பணம் செய்யவேண்டும்.

4) அவசரமான வேலை, அவசியமான வேலை, கழுத்துக்குக் கத்தி எனச் சில சமயங்களில் ஒருவேலை இருப்பதுண்டு. எலக்க்ஷன், தொலைந்துபோன குழந்தை, கோர்ட் கேஸ், வந்த நல்ல வரன் நல்ல முடிவு சொல்வது என விஷயமிருப்பதுண்டு. அதை hourly consecration மணிக்கொருமுறை சமர்ப்பணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதையும் மேற்சொன்னதுபோல் குறிப்பிட்ட நிமிஷத்திலாவது, அல்லது மணிக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்.

5) எந்த வேலை செய்தாலும் சமர்ப்பணம் செய்து ஆரம்பிக்கவேண்டும். இல்லையெனில் சமர்ப்பணம் தவறிவிட்டது என்றாவது கவனிக்கவேண்டும்.

6) சாவித்திரி தினமும் ½ பக்கம் முதல் 5 பக்கம் வரை ஏதாவது ஒரு நேரம் படிக்கவேண்டும்.முடியாவிட்டால் வாரத்தில் 1 நாளாவது மேற்கொள்ளவேண்டும்.

7) அரை நிமிஷம் தாமதிக்காமல் நடந்தால் நல்லது என சில சமயங்களில் பிரச்சினைகளிருக்கும்.கேட்ட பெரிய கடன் வருவது, வடக்கே போன மகன் இந்த வாரம் வருவான் என்பது படபடப்பாகிவிட்டது, வேண்டாத விருந்தாளி வந்து 52 நாள் ஆகியும் போகவில்லை (உ.ம். மாமியார்,நாத்தனார், தூரத்து உறவினர்), போன் கனெக்ஷன் வரும் என எதிர்பார்ப்பது போன்றவை "எப்பொழுது முடியும்' என முள் மேல் நிற்பது போலிருக்கும். அதுபோன்ற பிரச்சினை இருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு செய்யலாம். அரை நிமிஷத்தில் மிகத் திருப்தியாக முடியக்கூடிய முறையை a)எனவும் மற்றவற்றை பிறகும் எழுதியுள்ளேன்.

a)  பெரு முயற்சி செய்து அப்பிரச்சினை முழுவதையும் மறப்பதே அம்முறை. அது பலித்தால்அடிக்கடி தவறும். தவறும்பொழுது ஒரு க்ஷணம் நிதானித்து மனத்துள் நுழைந்த எண்ணத்தைஅப்புறப்படுத்தவேண்டும்.
b)      மணிக்கொரு முறை சமர்ப்பணம் செய்தல்.
c)      தியானம் ஆரம்பிக்கும்முன் அப்பிரார்த்தனையை மேற்கொள்வது.
d)     அப்பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது என்ற முடிவு.
e)     அது விஷயமாக மனதில் குறை எழக்கூடாது என்ற தீர்மானம்.
f)      நடக்கிறபொழுது நடக்கட்டும் என தீர்மானமாக விட்டுவிடுதல்.
g)     முடிந்ததை முடிந்தபொழுது செய்வது.
h)     அந்நினைவு வந்தால் அன்னையை நினைக்க முயல்வது. 
முடியாவிட்டால் மனத்துள் ஓர் புன்னகையை வரவழைப்பது.
i)      யாராவது அதை எழுப்பினால் react செய்யாமலிருப்பது.
j)     ஏதோ நல்ல காரணத்திற்காக தாமதம் ஆவதாகப் புரிந்துகொள்வது.

8) வாழ்க்கைக்கு முக்கியமான நெடுநாளையத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வேறு வேலையில்லாத பொழுது அதைப் பற்றிய விவரங்களைச் சேகரம் செய்வது, சிந்தனை செய்வது,அன்னை வழியில் அதற்கு முக்கியமானது என்ன என்று தேடுவது.

9) வேலையில்லாத நேரத்தில் கடந்த காலக் குறைகளுக்காக வருத்தப்படாமலிருப்பது.

10) முடிந்தால் அவற்றை past consecration கடந்த காலச் சமர்ப்பணத்திற்கு உட்படுத்துவது.

இந்த 10 தலைப்புகளில் ஒருவர் தம்மை உட்படுத்திக்கொண்டால், அவர் எந்த நிலையிலுள்ள அன்பரானாலும், அவருக்கு downfallஅதற்குக் கீழே போகவேண்டிய அவசியமிருக்காது. வாழ்க்கை ஒழுங்காக, நிதானமாக, ஏதோ ஓரளவில் குறையின்றி ஓடிக்கொண்டிருக்கும்.



- பிரார்த்தனை பலிக்க வேண்டும் by Sri Karmayogi Avarkal)

Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.  
TN, India.

Tags: Power of the Mother Solution Sathya Jeeviyam Luck SupraMental daily messages Sprituality Karmayogi Message AuroMere Meditation Center Sri Mother Aurobindo Annai Aravindar Ashokan Pondi Annai Pondicherry Annai Thought of the Day Consecration 
               


No comments:

Post a Comment