Pages

Thursday, July 26, 2012

நடந்து முடிந்த பின்தான் புரியும் - Message of the Day - July 26, 2012


  

  • அன்னையை அறிந்து நாம் பெற்ற சந்தோஷம் போதும் என்பது ஒரு நிலை. இல்லை, மேலும் மேலும் அன்னை வேண்டும், அன்னையை நெருங்கிவர வேண்டும் என்பது மற்றொரு நிலை.
  •  இரண்டாம் நிலையிலுள்ளவர்க்குரிய முறைகள் ஏராளம். அவற்றுள் "நடப்பதற்கு முன் புரிந்து கொள்ள முயல்வது'' ஒன்று. சுத்தம், தணிவான பேச்சு, நினைவு, சமர்ப்பணம், தியானம், சேவை, நூல்களைப் பயிலுதல், சமாதி தரிசனம், பிரச்சினைகளைத் தீர்ப்பது, வாய்ப்பை அனுபவிப்பது போன்ற முறைகள் ஏராளம்.  
  • நடப்பதற்கு முன் புரிய முயல்வது இவைபோன்ற ஒரு முறை. 
இதனால் வரும் பலன்கள்,
  • நிச்சயம் காரியம் கூடிவரும்.
  • எதிர்காலத்தில் தோல்வியேயில்லை என்ற நிலையும் உருவாகலாம்.
  • அன்னையை ஒருபடி நெருங்கி வரலாம்.
  • ஆத்ம ஞானம் ஓரிழை உற்பத்தியாகும்.

இதைச் சாதிக்கத் தேவையானவை:-
  • நம்பிக்கை
  • தைரியம், துணிச்சல்
  • முன்னேற வேண்டும் என்ற ஆர்வம்
  • சமர்ப்பணம்.
  • வேறு வழியில்லாதபொழுது, அன்னையை நாடுவதைவிட, எல்லா வழிகளும் தெரியும்பொழுது, அவற்றை விலக்கி அன்னையை நாடுவது சிறந்தது

- அன்பர் உரை - "நடந்து முடிந்த பின்தான் புரியும்" - From Malarntha Jeeviyam, Feb 2000


Thanks,   
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.
TN, India.  
               

No comments:

Post a Comment