Pages

Friday, June 15, 2012

Ego - Message of the Day - June 15, 2012


Man possesses his world and the things in it as the property of his Ego. He will be possessed by God and all HIS possessions when he sheds his Ego. It is a spiritually revealing decisive moment in one's life when the surrender is accepted by his being.

- Daily Messages Vol-1 by Thiru Karmayogi Avarkal

புதியதாக ஒரு நல்ல குணத்தை ஏற்றுக்கொள். உதாரணமாக இனிமையான உணர்வை உண்மையான புன்னகையால் வெளிப்படுத்த முயலலாம்.

  • விஞ்ஞான ஆராய்ச்சி biology உடல் நூலில் முதிர்ந்து, அது உள நூலைத் psychology தொடும் இடத்தில் நடந்த பல ஆராய்ச்சியின் முடிவுகளில் ஒன்று: புன்னகை இன உணர்வை வெளிப்படுத்துகிறது.
  • விலங்கினம் பெட்டையைத் தேடும் பொழுது (mating call) குரல் கொடுக்கும். நாகரீகம் வளர்ந்து இக்குரல் புன்னகையாயிற்று என்பது ஆராய்ச்சி.
  • ஆன்மீக ரீதியாக ஆன்மா மலரும்பொழுது முகத்தில் அது புன்னகையாக வெளி வருகிறது. சிரித்த முகமாகவே உள்ளவர் பலர், சிரித்தறியாதவர் சிலர். ஒருவரைக் காணும்பொழுது உளம் நிறைந்து, அகம் மலர்ந்து, உள்ளம் பூரித்து, அவரை நாம் கண்டதால் மகிழ்ந்தோம் என அறிவிக்கும் புன்னகையை எவர் ஏற்றாலும், அது ஆன்மாவின் மலர்ச்சிக்கு உதவும்.
  • ஒரு புத்தகம் கடன் வாங்க ஒருவர் வருகிறார். நாம் அதைக் கொடுக்கிறோம். வாங்கிக் கொண்டு, நிமிர்ந்து பார்க்காமல் போய் வருகிறேன் என்றும் சொல்லாமல் போய் விடுகிறார். இவர் thank you ன்று சொல்லப் பழகினால் இவருக்கு இது முன்னேற்றம்.
  • அழையாத வீட்டிற்குப் போய், அதை அனுதினமும் செய்து, வாராதே என்று அவர்கள் சொல்லும்வரை போகிறவர் "மதியாதார் தலைவாசல்'' மிதிக்க மாட்டேன் என்ற பழக்கத்தை மேற்கொள்ளுதல் பலன் தரும்.
  • பரீட்சைக்குப் போகும் மாணவன் இதுவரை தன்னிடமில்லாத ஒரு நல்ல பழக்கத்தை மேற்கொண்டு முதல் நாளே ஹால்டிக்கெட், பேனா, ஸ்கேல், நோட்ஸ் இவற்றை எடுத்து வைத்து, செருப்பு, சைக்கிளுக்கு ரிப்பேரிருந்தால் ரிப்பேர் செய்தால், அது நல்லது.
  • வீட்டிற்கு வந்த விருந்தாளியை மறந்து சாப்பிட உட்கார்ந்த பின், நீங்களும் சாப்பிட வாருங்கள் என்று கூப்பிடுபவர், வந்தவர்களை முதலில் சாப்பிடச் சொல்லும் பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்.
  • தனியாக உட்கார்ந்திருக்கும் பொழுது, தம் பெருமை, தமக்கு உலகம் இழைத்த கொடுமை, தம் குடும்பம் தம்மை அலட்சியம் செய்தது, தம் நண்பர்கள் செய்த துரோகம் ஆகியவற்றை நினைவு கூர்பவர், எப்பொழுதும் தம்மையே நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலமி என்பதால் இனி தனியே இருக்கும் பொழுது தம் சம்பந்தப்பட்டவற்றை நினைப்பதில்லை என்று முடிவு செய்தால் நல்லது.
  • எத்தனையோ வீடுகளில் - நம் வீடும் அதனுள் அடங்கலாம் - காப்பி சாப்பிட்ட டம்ளரை உடனே கழுவினால் அது புதிய நல்ல பழக்கமாகும்.
  • பிறர் கூறுவதை மறுத்துப் பேசாமலிருப்பது நல்லது. மனத்தால் மறுத்து நினைக்காமலிருப்பது உத்தமம்.

Thanks,
AuroMere Meditation Center (Sri Mother & Sri Aurobindo Center)
(ஸ்ரீ அன்னை அரவிந்தர் தியான மையம்)
Pallikaranai, Chennai.
TN, India.

No comments:

Post a Comment