Pages

Wednesday, May 30, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 16


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை :

எதைச் செய்தாலும் எவரும் அதை மேலும் உயர்த்த முடியாத அளவு செய்ய வேண்டும்.

முறைக்கான விளக்கம் :

கேட்க மேலே ஒருவர் இல்லையெனில், நாம் வேலை செய்ய சோம்பேறித் தனப்படுவோம். முடிந்தவரை வேலையைத் தட்டிக்கழிப்போம். இது சுபாவம்.
  • என்னால் முடிந்தவரை செய்தேன்.
  • இதைவிட என்ன செய்வது?
  • இதற்குமேல் யார் செய்ய முடியும்? யாராவது இதற்குமேல் செய்ததுண்டா?
  • இதற்குமேல் என்னைச் செய்யச் சொல்லி வற்புறுத்தாதே, என்று நாம் கேள்விப்படுகிறோம். இவர்கள் எவரும் 20%க்குமேல் வேலை செய்வதில்லை. தினமும் 4, 5 கடிதம் வந்தால், அதற்கு 4, 5 நாட்கள் பதில் எழுதாமலிருப்பது தவறு; 30 நாட்கள் தாமதம் மன்னிக்க முடியாது. 3 மாதங்கள் தாமதம் செய்பவர் தம்மை முதல் தரமான ஊழியர்என வர்ணிக்கிறார். இவர்கள் என்கணக்கில் வரமாட்டார்கள்.
  • மேற்பார்வையின்றித் தானே தன் வேலையைச் செய்பவனே ஊழியன். 100 பேர் உள்ள ஸ்தாபனத்தில் அப்படிப்பட்டவர் 3, 4 பேரே இருப்பார்கள். அவர்கள் வேலையை 70, 80% செய்வார்கள். 100% செய்பவரிருக்க மாட்டார்கள். 100% வேலையைச் செய்பவர் வேலையும் தரத்தால் 50 அல்லது 60% தானிருக்கும்.
  • மேற்பார்வைக்குட்பட்டுச் செய்யும் வேலைக்கு அன்னை பலன் வாராது; சம்பளம் வரும். செய்யும் வேலை IAS ஆபீசர் வேலையாகவோ, சமையல் வேலையாகவோ, எந்த வேலையாகவுமிருக்கலாம். அது,
  • அளவிலும், தரத்திலும் முழுமையாக இருக்க வேண்டும்.
  • முழுமையிலும் இரு வகைகளுண்டு.
  • இதற்கு மேல் செய்ய உடலில் தெம்போ, மனத்தில் அறிவோ இல்லை என்பது நம் திறன் செலவாகிவிட்டதுஎனப் பொருள்.
  • மனிதன் முடியுமிடத்தில் அன்னை செயல்படுவார்.
  • பாஸ் பண்ண முடியாது என்று வந்த பையன் அதுபோல் வேலை செய்து முதல் மார்க் வாங்கினான்.
  • அது குறைந்தபட்சம்.
  • அதிகபட்சம் ஒன்றுண்டு.
  • முனைந்தால் முடியாததில்லை என்பது அதற்குரிய சட்டம்.
  • எதை எதைச் செய்ய முடியுமோ, அவற்றுள் எது நமக்கு இப்பொழுது தெரியாதோ, அதைக் கற்க முயன்று, கற்று, வெற்றிகரமாகச் செய்தால், (No one can improve it) இதை யாரும் மேலும் உயர்த்த முடியாது என்பதுபோல் முடியும்.
  • அவர்கட்குப் பலன் அவர்கள் தொழில் வாராது.
  • அவர்கள் எந்தத் தொழில் முன்னேற முடியுமோ, அத்தொழிலுக்கு அவர்கள் வந்து, தொடர்ந்த முன்னேற்றம் பெறுவர்.
  • செய்வன திருந்தச் செய் என்பதை இது விளக்கும்.
  • நமக்கு அதிகபட்சம், வேலைக்குக் குறைந்தபட்சம்.
  • வேலைக்கு அதிகபட்சம், வாழ்வுக்குக் குறைந்தபட்சம்.


வாழ்வுக்கு அதிகபட்சம், அன்னைக்குக் குறைந்தபட்சம்.


அன்னையின் அதிகபட்சம் இரு வகைகள்:
  • நாம் பெறக்கூடிய அதிகபட்சம்.
  • அன்னை கொடுக்கக்கூடிய அதிகபட்சம்.


    -------------------------------

முறை :

எதைச் செய்தாலும் அதில் நம் நல்ல அம்சங்கள் முழுவதும் வெளிப்படும்படிச் செய்வது (to positively exhaust yourself).

முறைக்கான விளக்கம் :

வேலையைக் கடமையாகச் செய்யலாம்.
அதையே தலையாய கடனாக ஏற்றுச் செய்யலாம்.
ஆர்வமாக வேலையை ஏற்று, அற்புதமாகப் பூர்த்தி செய்யலாம்.

  • நாம் செய்யும் வேலை நம் ஸ்தாபனத்திற்கு நல்ல பலன் தரவேண்டும் என்று நினைத்துச் செய்யலாம்.
  • நமது நல்லெண்ணம் ஸ்தாபனத்திற்குப் பலிக்கும்படியும், வேலைக்குப் பலிக்கும்படியும், அன்னைக்குத் திருப்தி ஏற்படும்படியும் செய்யலாம்.
  • (Thoughtfulness) யோசனையாக வேலையை ஏற்றுப் பொறுப்பாகச் செய்யலாம்.
  • (Resourcefulness) இந்த வேலையை எவ்வளவு சாதுர்யமாகவும், சாமர்த்தியமாகவும் செய்ய முடியுமோ அப்படிச் செய்யலாம்.
  • நமக்குத் திறமை, பொறுப்பு, ஆர்வம், நல்லெண்ணம், தீவிர யோசனை, சாமர்த்தியம், சாதுர்யம், சமயோசிதம் எனப் பல நல்ல அம்சங்கள் உள்ளன. இதுபோன்ற நல்ல அம்சங்கள் முழுவதும் செயல்படும்படி வேலையைச் செய்தால், அங்கு அன்னை நிதர்சனமாவார்.
  • பசுமைப்புரட்சி என்பது உலகில் முதல் இந்தியாவில் ஏற்பட்டது.
  • நாடு உணவு உற்பத்தியைத் தானே செய்ய வேண்டும் என எவரும்
  • அதுவரை கூறவில்லை.
  • அந்தக் கருத்தை முன்வைக்க சுப்ரமணியம் முன்வந்தார்.
  • உணவு தானியம் விலை குறையக்கூடாது என்று நினைக்க எவருக்கும் தோன்றவில்லை.
  • அதையும் அவர் செய்தார்.
  • உரம், விதை, பூச்சிமருந்து ஆகியத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முனைந்தார்.
  • அதுவரை ராஜேந்திரப் பிரசாத், ராஜாஜி, ஜகஜீவன்ராம் உணவு
  • மந்திரியாக இருந்தனர். இவை அவர்களெல்லாம் செய்யாதன.
  • கடமைஎனக் கருதினால், இவை கடமையாகா.
  • அறிவு, ஆர்வம், தேசபக்தி, பொறுப்பு, முன்யோசனை ஆகியவை
  • வெளிப்பட சுப்ரமணியம் செய்தது பசுமைப்புரட்சி.
  • குரியன் அதே போன்ற வேலையை மந்திரி பதவியின்றி, ஒரு
  • இன்ஜினீயராக இருந்து செய்தார்.
  • ஆனந்த் வெற்றி பெற்றது.
  • அவருக்கு வெளியில் 5 இலட்சம் ரூபாய் மாதச் சம்பளம் பெறும் நிலையிலிருந்த பொழுது, தியாக மனப்பான்மையால் 5 ஆயிரம் ரூபாய் பெற்றுச் சேவை செய்தார்.
  • இன்று அவர் 168 விருதுகள் பெற்றுள்ளார்.
  • உலகப் பிரசித்தி பெற்றார்.
  • இதைச் செய்யும் பொழுது அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது மக்கள் எதிர்ப்பை ஏற்றுச் செய்தார்.
  • மேற்சொன்னக் கருத்தை இது போன்ற விஷயங்கள் விளக்கும்.
  • நல்ல அம்சங்கள் ஏராளம்.
  • அவற்றின் எல்லைக்கு அளவில்லை.
  • அவை தீரும்படி வேலை செய்யப் பரந்த மனம் தேவை.
  • அதைப் பூர்த்தி செய்ய ஆர்வம் மிகுந்த உறுதி தேவை.
  • தளராத நெஞ்சம் தாராளமாகத் தேவை.
  • அவை மனிதச் சுபாவத்தின் எல்லைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
  • எல்லையைக் கடந்தால் தெய்வ தரிசனம் உண்டு.
  • செய்யும் செயலைவிடச் செய்யும் மனப்பான்மை முக்கியம்.
  • நல்ல அம்சம் தீர்ந்தால், தெய்வ அம்சம் செயல்படும்.

    .............................தொடரும்.

Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment