ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். ----------------------------------------------------------------------------------------------------- யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ........... ----------------------------------------------------------------------------------------------------- முறை 12 :
அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்வது.முறைக்கான விளக்கம் :மனிதன் என்பவன் அகந்தையாலானவன். நாம் டெல்லியில் குடியிருந்தாலோ, அமெரிக்காவிலிருப்பதாலோ, தமிழ் மறந்து போவதில்லை. இங்கிலீஷில் பேசினாலும் சிந்தனை தமிழில்தானிருக்கும். 12 x 8 = 96 என்பதை மனம் தமிழில்தான் சொல்லும். தமிழ் பிறந்த பிறகு கற்றது. அகந்தை ஏற்பட்டதால்தான் பிறந்தோம். அகந்தை இல்லாவிட்டால், பிறப்பில்லை. நான் சமர்ப்பணம் செய்வதால், சரணம் செய்வதால் பெரியவன் என நினைப்பது அகந்தை. அது அடுத்தவர்க்குச் சரணம் செய்ய அனுமதிக்காது. அன்னையிடம் உள்ள பணிவு அன்பரிடம் கர்வமாக மாறும். எல்லா ஜீவாத்மாக்களும் என்னுள் இருக்கின்றன, நான் அவர்கள் அனைவர் உள்ளும் இருக்கிறேன் என்பது உபநிஷதம். அன்பரில் உள்ள அன்னைக்குச் சரணம் செய்தால், அந்தத் தத்துவத்தை ஏற்பதாகும். அது ரிஷிகள் நிலை. சிவபெருமான் சண்டாளனாக வந்தபொழுது சங்கரர் சண்டாளனைக் கண்டார். நம்மால் அன்பரில் அன்னையைக் காண முடியுமா?Download the Audio Format of this book by clicking the following link. |
No comments:
Post a Comment