Pages

Monday, May 21, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 14


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை 11 :

அன்னையே உன் சரணாகதியை ஏற்றபின், அடுத்தது இல்லை.

முறைக்கான விளக்கம் :


இந்த யோகம் மனிதனுக்கில்லை. அவன் பங்கு சரணாகதி. யோகம் இறைவனுக்கு என்றார் பகவான். சரணாகதி கீதை கூறுவது. அது ஆத்மா சரணடைவது. மோட்சம் கிட்டும். பகவான் கூறும் சரணாகதி வளரும் ஆன்மாவையும், நம் சுபாவத்தையும் சரணடைவது.

  • குடும்பத்தைத் துறந்து மேற்கொள்வது சன்னியாசம். அது பெரியது. தன் சொத்து முழுவதையும் கொடுத்து, குடும்பத்தையும் துறந்து ஏற்பது யோகம்.
  • ஆத்மாவைச் சரணடைவதற்கும், சொத்தையும் ஆத்மாவையும் சரணடைவதற்கும் இந்த வித்தியாசம் உண்டு.
  • இதற்கும் அடுத்த கட்டம் சுபாவத்தைச் சரணம் செய்வது.
  • சரணாகதி என்ற சொல் நம் பரம்பரையாக வந்தது என்பதால் நாம் பகவான் கூறும் சரணாகதியை அப்படி எடுத்துக் கொள்கிறோம். அது இல்லை.
  • ஆத்மாவை அறிந்தவன் ஜீவன் முக்தன்.
  • அதைப் பரம்பரையாக ஜீவாத்மா என்கிறோம்.
  • வளரும் ஆன்மாஎன்பது மனத்திலும், உணர்விலும், உடலும் வெளிப்படும் ஆன்மா.
  • மனம் அமைதியானால் வெளிப்படுவது ஆன்மா.
  • மனத்தில் சொல்லெழுந்தால் அமைதி கலையும், ஆன்மா மறையும்.
  • சொல் சிறப்பாக எழும்பொழுது ஆன்மா சொல்லைத் தாங்கி வருகிறது.
  • கவிகட்கும், மேதைகட்கும் அது வெளிப்படும்.
  • சொல்லை மனம் சொல்வதற்குப் பதிலாக மனத்தின் ஆன்மா சொல்வது மேதையின் சொல்லாகும்.
  • மேதையின் சொல்லைச் சொல்வது மனத்தில் வளரும் ஆன்மா.
  • மாவீரனின் செயலைச் செய்வது உயிரில் வளரும் ஆன்மா.
  • செயலையும், சொல்லையும், உணர்வையும் இறைவனின் ஸ்பர்சமாக உடல் ஏற்றுப் புல்லரிப்பது உடல் வெளிப்படும் வளரும் ஆன்மா.
  • சுபாவம் சரணடையாவிட்டால் சுபாவம் வெளிப்படும். மனத்தில் சுபாவம் வெளிப்பட்டால் மௌனம் கலையும்; சொல் எழும்.
  • உணர்வில் சுபாவம் வெளிப்பட்டால் கோபம், பயம் எழும்.
  • உடல் சுபாவம் வெளிப்பட்டால் உடல் ஜடமாக இருக்கும்; புல்லரிக்காது.
  • நம் சரணாகதியை அன்னை ஏற்பது எனில் மனத்திலும், உணர்விலும், உடலும் சைத்தியப்புருஷன்எனும் வளரும்ஆன்மா செயல்பட வேண்டும்.
  • அதைக் கடந்த மனிதநிலை வாழ்வில் இல்லை.
  • சரணாகதியை அன்னை ஏற்றபின் உனக்கு வேறென்ன வேண்டும் என்று பகவான் கேட்கிறார்.
  • சரணாகதி சமர்ப்பணம் பூர்த்தியாகும் நிலை.
  • பிரச்சினைத் தீர அன்னையிடம் கூறுவது சமர்ப்பணம்.
  • கூறினால் பிரச்சினை தீர்ந்துவிடும்.
  • யோகம் செய்ய அந்தச் சமர்ப்பணம் போதாது.
  • ஜீவனையும், சுபாவத்தையும் சரணம் செய்ய வேண்டும்.
  • சரணாகதியை அன்னை ஏற்றதற்கு அடையாளம் மனம் மௌனத்தால் சிறந்து, உணர்வு ஆனந்தமடைந்து, உடல் புல்லரிப்பதாகும்.
  • பக்குவமான பக்தருக்கு இதுவும் பலிக்கும்.
  • இது யோக முறை, சிறந்த முறை.

..............................தொடரும்.


Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment