Pages

Wednesday, May 16, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - Part 11


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை 8 :

மௌனம் சிறந்து காட்சியாகும்.

முறைக்கான விளக்கம் :

உணர்ச்சியால் காட்சி பெறுபவர் அநேகர். அவர்கட்கு அக்காட்சி பலிக்கும். மனம் உணர்ச்சியைக் கடந்தது. முனிவர் மனத்தின் மௌனம் மனத்தையும் கடந்தது. காட்சி ரிஷியைச் சேர்ந்தது. ஓர் ஆபீசில் கிளார்க் மூலம் ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்கும், ஆபீசர் மூலம் நிறைவேற்றுவதற்கும் உள்ள வித்தியாசம், இந்த இரண்டு காட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம். மனம் மௌனமாகும்பொழுது சில சமயம் தானே கலையும். சில சமயம் உயரும். உயரும்பொழுது நாம் அதைக் கலைக்காமருந்தால் அது காட்சியாக மாறும்.

  • யோகி - ஞானம் பெற்றவர். 
  • ரிஷி - மௌனம் சிறந்து எழும் காட்சி 
  • முனிவர் - மௌனத்திற்குரியவர். 
  • மனிதன் - சிந்தனைக்குரிய மனம் உடையவன். 
  • உணர்ச்சி - பெரும்பாலோர் காணும் காட்சி.

தியானத்தில் மனம் அமைதிப்படுபவருக்கு உரிய பயிற்சி முறையிது. யார் எதை நாடுகிறார்களோ அவர்கட்கு இறைவன் அதாக இருந்து மறைகிறான் என்பது பகவான் சொல். சச்சிதானந்தம் சத் பிரம்மம், சித் பிரம்மம், ஆனந்த பிரம்மமானால், மனிதன் ஜடப் பிரம்மம், பிராணப் பிரம்மம், மனோ பிரம்மம் என்பது தத்துவம்.சத்திலிருந்து ஜடம் வரை அனைத்தும் பிரம்மமே.உருவமும், தோற்றமும் வேறு; உள்ளுறை ஜீவன் ஒன்றே.மௌனம் காட்சியை நாடுபவர்க்குக் காட்சியாகிறது. அதே மௌனம் ஞானத்தை நாடுபவர்க்கு ஞானமாகும். பிரம்மத்தை நாடினால் மௌனம், மௌனப் பிரம்மமாகும்.

..............................தொடரும்.


Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks,
AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment