ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு, வணக்கம். திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். ----------------------------------------------------------------------------------------------------- யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ........... ----------------------------------------------------------------------------------------------------- முறை 5 :உனக்குத் தெரிந்த அத்தனைக் கட்டுப்பாடுகளையும் (disciplines) மொத்தமாகப் பின்பற்ற வேண்டும்.முறைக்கான விளக்கம் : இங்கு 93 முறைகளைக் காண்கிறோம். ஆனால் ஒருவருக்கு 8 அல்லது 10 முறை பழக்கமாக இருக்கும். அவையனைத்தையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கணக்கெழுதுவது, சுத்தம் செய்வது, மெதுவாகப் பேசுவது, அடுக்கி வைப்பது போன்றவை நாம் பின்பற்றும் முறைகளானால், அவற்றை முழுமையாகப் பின்பற்றுவது இம்முறை. நாம் பேசுவது அடுத்தவருக்குக் கேட்டால் போதும்எனில் குரல் 20 மடங்கு குறையும். அது பலிக்க நாம் அவர் கவனத்தை ஈர்த்துப் பிறகு பேசவேண்டும். நாம் வாயால் பேசுகிறோம்; பிறர் காதால் கேட்கின்றனர். இம்முறையில் அவர் மனத்துடன் தொடர்புகொண்டு, மனம் பேசவேண்டும். மனம் மனத்தோடு பேசுவது மெதுவாகப் பேசுவது. இது போன்றவற்றைப் பின்பற்றினால் 24 மணி நேரமும் மனம் இதையே நினைத்துக் கொண்டிருக்கும். அதற்குரியது நல்லபலன். அது முறையின் சிறுபகுதி. மனம் முறையை விட்டகன்று செயல்படுவது பெரும்பலன் தரும். சுத்தம், சத்தம் இரண்டும் பயிலும்பொழுது அவை மனத்தில் இருமுறைகளாக இருக்கும். அவை இரண்டும் இணைவது சரி. நாம் பின்பற்றும் 8 அல்லது 10 முறைகளுக்கு உள்ளே ஒரு மையம் உண்டு. அவையனைத்தும் ஒரு மையத்தில் சேர்கின்றன. அந்த மையத்திலிருந்து அமைதியாகச் செயல்படுவது உயர்ந்த முறை. ..............................தொடரும். Download the Audio Format of this book by clicking the following link. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் Thanks, AuroMere Meditation Center , Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center Pallikaranai, Chennai, India |
Pages
▼
No comments:
Post a Comment