ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு, வணக்கம். திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். ----------------------------------------------------------------------------------------------------- யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ........... ----------------------------------------------------------------------------------------------------- முறை 4 :மௌனம் சேர்ந்து மனம் கனத்தால், அதைப் பேச அனுமதிக்க வேண்டும்.முறைக்கான விளக்கம் : மௌனம் சேர்ந்தால் பேச முடியாது. பேசினால் மௌனம் கலையும். ஆனால் மௌனம் முழுவதும் சேர்ந்தால் ஜீவன் ஆழ்ந்து, அகன்று, செறிவு பெற்றுக் கனக்கும். அப்பொழுது பேசலாம். அது மௌனத்தைக் கலைக்காது. மௌனத்தின் பெருஞ்சக்தி சொல்மூலம் வெளிப்படுவது தெரியும். அடுத்த கட்டத்தில் அப்படிப் பேசுவதால் மௌனம் வளர்ந்து, மௌனத்தின் பின்னுள்ள மௌனமாகும். நாமே முயன்றுபெறுவது மௌனம். தானே நம்மைத் தேடிவருவது மௌனத்தின் பின்னுள்ள மௌனம். முதல் கூறியது நம்பிக்கையால் பெறுவது; அடுத்தது அருள். பேரருளில் செயல் மௌனத்தின் பின்னாலுள்ள மௌனத்திலிருந்து எழுவதைக் காணலாம். The Life Divine படித்தால் மனம் மௌனமாகும்; சாவித்ரி படித்தால் உணர்ச்சி மௌனமாகும்; சமர்ப்பணம் செய்தால் ஜீவன் மௌனமாகும். ஜீவன் மௌனமானபின் நடக்கும் வேலை நாம் செய்வதில்லை. அன்னையே எழுப்பி, அன்னையே செய்வதாகும். புதுவைக்குப் போ' என பகவான் கேட்ட குரல் அதுபோன்றது. அது குரலாகவும், எண்ணமாகவும், வேணுகானமாகவும், ஆகாச லிபி (எழுத்து)யாகவும் எழும். இது யோகத்திற்கேயுரிய பவித்திரமான உயர்ந்த நிலை. வாய் பேசாத மௌனம் முதல்நிலை மௌனம். மனம் பேசாமலிருப்பது அடுத்த நிலை. ஜீவன் மௌனமாவது பெரியது. ஜீவன் மௌனத்திலிருந்து செயல்படுவது நாம் அன்னைக்குக் கருவியாவது. இந்த நிலைகளைக் கட்டம், கட்டமாக நாம் கடந்து போகும்பொழுது கை தானே எழுதும், வாய் தானே பேசும், நாம் கேட்காத கேள்விக்குப் பிறர் பதில் கூறுவர். வாழ்க்கை பதில் கூறும்வாயிலாகச் செயல்படும். நினைப்பது நடக்கும். நினைவே வழிபாடு; நினைவே செயல். ..............................தொடரும். Download the Audio Format of this book by clicking the following link. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் Thanks, AuroMere Meditation Center , Sri Annai Aravindar (Sri Mother & Sri Aurobindo) Center Pallikaranai, Chennai, India |
Pages
▼
No comments:
Post a Comment