Pages

Wednesday, May 2, 2012

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் - 5


ஸ்ரீ அன்னை மற்றும் அரவிந்தர் அன்பர்களுக்கு,
வணக்கம். 
திரு. கர்மயோகி அவர்களின் யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற புத்தகத்தினை தொடராக இங்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். இன்றைய பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில முறைகளுக்கான, கர்மயோகி அவர்களுடைய விளக்கங்கங்களை அன்பர்கள் காணலாம். 
-----------------------------------------------------------------------------------------------------
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் என்ற நூலின் தொடர்ச்சி ...........
-----------------------------------------------------------------------------------------------------

முறை 3 :

சைத்தியப்புருஷன் செயல்படும்படி நடப்பது சரி.

முறைக்கான விளக்கம் :
                 இதை விளக்குவது எளிது. எந்த நேரமானாலும், எந்த இடமானாலும், எந்த வேலையாக இருந்தாலும்,பிரச்சினை நினைவுக்கு வந்தவுடன், க்ஷணம் தாமதிக்காமல் அன்னையிடம் கூறுவதே இம்முறை.சைத்தியப்புருஷன் வெளிவர, சமர்ப்பணம் அவசியம் என்பது எளிமையான விளக்கம். சமர்ப்பணம், சரணாகதியாகும். அன்னை நினைவிருப்பதே சமர்ப்பணம் செய்ய உதவும். காரியம் என்றவுடன்காரியம் நினைவு வரும். அன்னை நினைவு வாராது என்பதேயுண்மை. பெண்கள் பலர் tour போகும்பொழுது தானும் போக நினைத்தால் உடனே அப்பெண்மணி கணவனை அனுமதி கேட்க நினைப்பாள். வீட்டிற்கு வந்து அனுமதி கேட்பாள். நண்பர்களிடம் என்கணவரைக் கேட்டுச் சொல்கிறேன் என்பாள். கணவன் அந்நிலையில் வருகிறேன்என்று தன் முடிவைக் கூறிவிட்டு, வீட்டில் மனைவியிடம் தன் முடிவைத் தெரிவிப்பான். அதே நிலையில் ஓர் அமெரிக்கப்பெண் தான் வருவதாக நண்பர்களிடையே கூறுவாள். வீட்டிற்கு வந்தால் கணவனிடம் கூறினாலும் கூறுவாள், இல்லையென்றாலும் இல்லை. அமெரிக்கப் பெண்கள் அங்கு இந்தியப் பெண்கள் கணவன் உத்தரவுத் தேவை என்று கூறுவதைக் கேட்டு வாய்விட்டுச் சிரிப்பார்கள். 1000 ஆண்டு பழக்கத்தில் இந்தியப்பெண் கணவனை அனுமதி கேட்கிறாள். சமர்ப்பணம் செய்ய 1000 ஆண்டு பழக்கம் தேவை. வேலையென வந்தால் அன்னை நினைவு வாராது. அப்படி வந்தால் சொல்லாக வரும். செயல் சொல்லுக்குப் பின்னாலுள்ள சூட்சும லோகத்தில் நடக்கிறது. நினைத்தால் நடக்கிறது என்பது சமர்ப்பணம் நினைவுள்ளவருக்கு. மனம் ஓடும் எண்ணங்களால் நிரம்பியது. இதன்பின் சிந்தனையுண்டு. மனம் இதற்குப் பின்னாலுண்டு. அதன்பின் சூட்சுமமனம் உண்டு. நாம் சூட்சும மனத்தை மையமாக்கினால்தான் சமர்ப்பணம் மனத்தில் நினைவு வரும். இது யோகப் பயிற்சி. மகன் கல்லூரியிலிருக்கிறான். பார்த்தால் தேவலை போலிருக்கிறது எனில் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைவான். மகன் மனத்தின் சூட்சுமத்திலிருப்பதால் நினைத்தவுடன் நடக்கிறது. அன்னையும் வேலையும் அதுபோல் மனத்தில் தன்மைப்பெற வேண்டும். ஓரிரு நாள் பயின்றால் இதன் பெருமை, ஆழம், யோக நறுமணம் தேனருவியாய் ஜீவனில் பாய்வது தெரியும். மனம் கட்டைபோட்டதுபோல் ஜீவனற்றிருக்கும். சூட்சுமம் அன்றலர்ந்த மலராகும்.
..............................தொடரும்.

Download the Audio Format of this book by clicking the following link.
யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

Thanks, AuroMere Meditation Center ,
Sri Annai Aravindar (Mother & Sri Aurobindo) Center
Pallikaranai, Chennai, India

No comments:

Post a Comment